ஒய் திஸ் கொலவெறி
ஒய் திஸ் கொலவெறி பாடல் தனுஷ்க்கு பெருமை
தமிழுக்குப் பெருமை சேர்க்காது என்று சொல்லும்
தமிழறிஞர்களுக்கு இப்பாடல் கொலவெறி தரலாம்
மக்கள் தொலைக்காட்சி தவிர்த்து மற்றைய சேனல்கள் நடப்பு வழக்கில் ஆங்கிலம் கலந்து பேசப்படுவது போன்று தமிழ் செய்திகள் வழங்குகின்றன.அரவை இயந்திரம் என்றால் விழிப்பவர்கள் கிரைண்டர் என்றதும் கிரகித்துக்
கொள்கிறார்கள்.பெயரில் தலையெழுத்து தமிழில்
எழுதாதவர்கள் மீது வருத்தங்கொள்ளும் தமிழார்வலர்கள் உள்ளார்கள்.ஒலைகளில் எழுதப்பட்ட மொழிகள் காகிதங்களைக் கடந்து
இணையங்களில் இன்று இயங்குகின்றன.கணிணிகளில் தமிழ் விசைப்பலகைகள் இல்லை.செல்போன்களில் தமிழ் குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில் அனுப்பப்படுகின்றன.ஆங்கிலத்தில் எழுத தமிழாகும் சாப்ட்வேர்கள் உள்ளன.ஆங்கில மீடியாக்களில் பயிலும் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களைத் தேடப்போவதில்லை.இப்படியே
சென்றால் தமிழ் வாழலாம் எழுத்துக்கள் ஆங்கிலமாக மாறிவிடலாம்.இவ்வாறு யோசிக்க
கொலவெறி வரலாம்
No comments:
Post a Comment