காதல் கவிதைகள்,
இதுதான் காதலா
ஜானுவும்,மணியும் காதலர்கள் .ஜானு ஏழை பெண் ,மணி நடுத்தர குடும்பம் .இருவரும் உயிருக்குயிராய் காதலித்து வந்தனர்.ஓர் நாள் மணி பக்கத்து வீட்டு பணக்கார பெண்ணை கூட்டிக் கொண்டு ஓடி போய் விட்டான் ,பின்னர் தான் அவளுக்கு புரிந்தது அவன் தன்னை காதலிப்பதாக நாடகம் ஆடி இருக்கிறான் என்று .சில மாதங்கள் கழித்து அவளும் திருமணம் முடித்து வெளிநாட்டில் குடியேறினால் .சில வருடங்கள் கழித்து மீண்டும் அவளின் பிறந்த ஊருக்கு வருகிறாள் .அங்கு எதிர் பாராத விதமாய் மணியை சந்திக்கிறாள் .பரட்டை தலையும் தாடியும் மீசையுமாய் உருக்குலைந்த அவன் கோலத்தை பார்த்ததுமே அவளுக்கு புரிந்து போனது அவன் வறுமையில் வாடுகிறான் என்று.அப்போது அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் ".சீ. சீ..இவனையா காதலித்தோம் ?அவனும் அவன் மூஞ்சியும் பிச்சைகாரன் மாதிரி ,பாத்தாலே குமட்டிற்று வருது ,எனக்கு அநியாயம் செய்தவன் தானே நல்லா வேணும் ,நல்ல காலம் கடவுள் என்னை காப்பாத்திட்டாரு ".என நினைத்து கொண்டே அவனை பார்த்து ஏழனமாய் சிரித்து விட்டு பெருமிதமாய் நடை போட்டால் அவள் .அவள் போகும் வழியையே பார்த்துக் கொண்டு நின்றான் மணி .
No comments:
Post a Comment