88kavithai.blogspot.com
ஜாதிய தூக்கி போடு
என் தாய் வயிற்றில் நான் நெளிந்த பொழுது என்னை வெளியே எடுத்தவர் (பிரசவம் பார்த்தவர் )
என் ஜாதிக்கிடையாது ?
நான் சிறுபிள்ளையாய் இருக்கும் பொழுது என்னை கட்டித்தழுவி முத்தம் கொடுத்தவர்கள்
என் ஜாதிக்கிடையாது ?
இன்று நான் பகுத்தறிவோடு பெசிக்கொண்டிருக்கிரேனே
எனக்கு பாடம் சொல்லிகுடுதவர்கள்
என் ஜாதிக்கிடையாது ?
நான் சிறு பிள்ளையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பொழுது
என்னை காப்பாற்றி
எனக்கு மறு ஜென்மம் கொடுத்த மருத்துவர்
என் ஜாதிக்கிடையாது ?
தினமும் முன்று வேலை உணவு உட்க்கொல்கிரேனே அந்த விவசாயி
என் ஜாதிக்கிடையாது ?
அன்று முதல் இன்று வரை
எவருமே என் ஜாதிக்கிடையாது
நான் ஜாதி ஜாதி என்று அலைந்திருந்தல்
உன்ன உணவு கிடைக்காது ?
உடுத்த உடைகள் கிடைக்காது ?
பருக தண்ணீர் கிடைக்காது ?
படிக்க சொற்கள் கிடைக்காது ?
பாசமான நட்பு கிடைக்காது ?
எனக்காக உயிரையும் தரவிருக்கும் காதலியும் கிடைதிருக்கமாட்டால் ?
குப்பைல தூக்கி போடுங்கையா இந்த ஜாதிய.
No comments:
Post a Comment