Saturday, 16 February 2013

காதல் கவிதைகள்,


காத்திருக்கிறேன்

shajina's படம்
தொலை தூரத்தில் நீ இருக்கிறாய் என்று தெரிந்தும் யாரோ உந்தன்
பெயரை உச்சரித்தாலே நீயாக‌ இருக்கக்கூடாத‌ என்று ஏங்குது
பேதை இவள் நெஞ்சம்
வீதி ஒரம் நான் செல்லும் வேளையில்
உன்னை போல‌ யாரும் சென்றாலே ஒதுங்கி நிற்கிறேன்
ஏன் தெரியுமா?
உன்னை தவிர‌ எந்தன் நெஞ்சமும் கண்களும்
இன்னொருத்தனை ரசிக்க‌ கூடாது என்பதற்காக்
மனசு உன்னை இன்னொருவனுடன்
ஒப்பிட்டு பார்க்க‌ கூட‌
விரும்பவில்லை உந்தன்
அரவணைப்பிற்காக‌ உன்னுடனான‌
நிஜங்களுக்காக‌ மறுஜென்மம்
வரை காத்திருக்கிறேன்
ஆனால் என் இதயத்திற்கு
அது ஏழு ஜென்மமாய் தெரிகிறது

No comments:

Post a Comment